கவரும் கானம்
அண்மையில் என்னை மிகவும் கவர்ந்த பாடல் இதுதான். கோலக்குழல் விழி கேட்டோ (மலையாளம்).
இனிமையான குரல்கள், அழகிய வரிகள், மென்மையான இசை. இதுதாங்க கோலக்குழல் பாட்டு ஹிட்டானதற்கு காரணம்.
இந்த பாடலை பாடி இருப்போர் விஜய் யேசுதாஸ் மற்றும் ஸ்வேதா மோகன். ஸ்வேதா மோகன் யாருன்னு தெரியும்ல, நம்ம பாடகி சுஜாதா சேச்சயின் மகள்தான். கேரளாவுல இவங்க ஒரு கலக்கு கலக்கிகிட்டு இருக்காங்க. தமிழில், நான் தரை நிலா (ராமேஸ்வரம்), விழியில் உன் விழியில் (கிரீடம்), நீதானா (சாது மிரண்டால்), மனசுக்குள் (அஞ்சாதே) மற்றும் தென்றலுக்கு நீ (அறை எண் 305ல் கடவுள்) பாடல்களை பாடியிருக்காங்க.
ஸ்வேதா சிறுமியாக இருக்கும் போது முதலில் பாடிய பாடல் பாம்பே படத்தில் இடம்பெற்ற குச்சி குச்சி ராக்காம்மா.
அம்மா மாதிரியே ஸ்வேதாவுக்கும் நல்ல குரல் வளம். விஜய் யேசுதாஸ் பற்றி சொல்லவே தேவையில்லை. இவருக்கும் நல்ல குரல் வளம். இரண்டு நல்ல பாடகர்கள் சேர்ந்து பாடினா சொல்லவா வேணும்?
இன்னொரு செய்திங்கோ...
கேரள அரசின் சென்ற வருடத்திற்கான சிறந்த பாடல் கோலக்குழல் பாட்டுக்கு கிடைத்திருக்கிறது. இந்த பாடலை பாடி சிறந்த பாடகன், சிறந்த பாடகிக்கான விருதுகள் விஜய் யேசுதாஸ் மற்றும் ஸ்வேதா மோகன் இருவருக்கும் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நீங்களும் அந்த பாடலை கேட்டு, கண்டு மகிழுங்கள்:
என்னங்க, கோலக்குழல் அழைத்தது கேட்டதா?
Friday, May 23, 2008
Subscribe to:
Posts (Atom)